UAE Tamil Web

ஏழைகளுக்கு உணவளிக்கும் அமீரகத்தின் ‘1 பில்லியன் மீல்ஸ்’ திட்டம்.. ஆறு நாட்களுக்குள் 76 மில்லியன் உணவுகள் சேமிப்பு

உலகம் முழுவதும் பின்தங்கி உள்ள 50 நாடுகளில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை வழங்க துபாய் ஆட்சியாளர் அறிவித்த ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரத்தில் ஆறு நாட்களுக்குள் 76 மில்லியன் உணவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய மற்றும் ஏழை மக்களுக்கு உணவுகளை நேரடியாக வழங்க ரமலான் மாதத்தில் இத்திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

1 பில்லியன் மீல்ஸ் திட்டத்திற்கு, தனிநபர்கள், நிறுவனங்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் உட்பட, வணிக வட்டாரங்கள், அமீரக மற்றும் வெளிநாடுகளில் உள்ள தனியார் துறையினர் உட்பட அனைவரும் பங்களிக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த முயற்சியானது உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளில் பின்தங்கிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள், அகதிகள், இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உணவு வழங்கி ஆதரவு அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் ஆறு நாட்களுக்குள் 45,589 நன்கொடையாளர்கள் 76 மில்லியன் உணவுகளை வழங்கியுள்ளனர். இந்தியா, லெபனான், ஜோர்டான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் எகிப்து உள்ளிட்ட ஆறு நாடுகளில் உணவு விநியோகம் தொடங்கியுள்ளது.

1 பில்லியன் மீல்ஸ் பிரச்சாரம் 100 மில்லியன் மீல்ஸ் பிரச்சார வெற்றியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பின்வரும் குறிப்புகள் மூலம் 1 பில்லியன் மீல்ஸ் முயற்சிக்கு நன்கொடை அளிக்கலாம்:
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: www.1billionmeals.ae.
  • எமிரேட்ஸ் NBD இல் வங்கி பரிமாற்ற எண்: AE300260001015333439802.
  • நன்கொடையாளர்கள் du நெட்வொர்க்கில் 1020 அல்லது எடிசலாட் நெட்வொர்க்கில் 1110 என்ற எண்ணுக்கு “உணவு” அல்லது “وجبة” என SMS அனுப்புவதன் மூலம் மாதாந்திர சந்தா மூலம் ஒரு நாளுக்கு 1 திர்ஹம்ஸ் நன்கொடை அளிக்கலாம்.
  • 8009999 என்ற கட்டணமில்லா எண் மூலம் 1 பில்லியன் மீல்ஸ் திட்டத்தின் கால் சென்டர் மூலமாகவும் நன்கொடைகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap