UAE Tamil Web

அபுதாபி: செப்டம்பர் 5 முதல் 100% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம்..!

abudhabi

அபுதாபியில் அரசு நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதிமுதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட மற்றும் அதிலிருந்து விலக்குப் பெற்ற நபர்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டசைக் காட்ட வேண்டும். தடுப்பூசி எடுக்காதவர்கள் ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை PCR டெஸ்ட் எடுக்கவேண்டும் உள்ளிட்ட அரசு விதித்த கொரோனா வழிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைபிடிக்கத் தவறுபவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இது அவர்களது வருடாந்திர விடுப்பு அல்லது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவலகங்களுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டசை காட்ட வேண்டும். தடுப்பூசி எடுக்காதவர்கள் 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளைக் காட்ட வேண்டும்.

மருத்துவ காரணங்களினால் சில குழந்தைகளை ஆன்லைன் மூலமாக கல்வி பயில பள்ளி நிர்வாகம் அனுமதிப்பதுண்டு. அப்படி வீட்டிலேயே கல்வி பயிலும் 10 மற்றும் அதற்குக் குறைவான வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்டிருக்கும் ஒரே பெற்றோரான பணியாளர்களும் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

abudhabi
5 Shares
Share via
Copy link