UAE Tamil Web

“போன் கட்டணத்தை செலுத்த 15 நாட்கள் அவகாசம் தருகிறோம்” எதிசலாட் வெளியிட்ட அறிவிப்பு..!

Etisalat

அமீரகத்தின் முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்கு நிறுவனமான எதிசலாட் மக்களின் நலன் கருதியே பில்களை செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தி உள்ளது.

ஒவ்வொரு மாதத்திற்குமான எதிசலாட் பில்லை அடுத்த மாதத்தின் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதன் மூலம் சேவையை மீண்டும் பெறுவதற்கான 26.25 திர்ஹம்ஸ் செலவு மற்றும் ஐந்து சதவிகிதம் மதிப்பு கூட்டு வரியையும் மக்கள் தவிர்க்கலாம்.

மக்கள் தங்களுடைய கிரெடிட் கார்டு மூலமாகவே இந்த பில் செலுத்துவதை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தாமாகவே பில் கட்டணத்தை செலுத்தும் வகையில் தேர்வு செய்துகொண்டால் ஒவ்வொரு மாதமும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்குள் 2G சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமீரகத்தில் 2G இணைய சேவை டிசம்பர் 2022ல் முடிவுக்கு வந்துவிடும் என Telecommunications and Digital Government Regulatory Authority (TDRA) தெரிவித்திருந்ததையடுத்து எதிசலாட் நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நினைவில்கொள்ளத்தக்கது.

Etisalat
0 Shares
Share via
Copy link