UAE Tamil Web

அமீரகம்: கார் மோதி பரிதாபமாக உயிரழந்த இரண்டு ஒட்டகங்கள்..!

road

உம் அல் குவைனின் அல் இத்திஹாட் பகுதியில் வேகமாகச் சென்ற வாகனம் இரண்டு ஒட்டகங்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அவை உயிரிழந்திருக்கின்றன. இதனையடுத்து வாகனவோட்டிகள் சாலைகளில் செல்லும்போது குறிப்பாக ஒட்டகங்கள் செல்லும் வழியில் செல்பர்கள் கவனமாக செல்லும்படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மதியம் 1.40 மணிக்கு ராஸ் அல் கைமா செல்லும் வழியில் அல் இத்திஹாட் பகுதியில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறது. விபத்து ஏற்படுத்தியவரின் வாகனம் கடுமையான சேதமடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் விபத்தில் கடுமையாக தாக்குதலுக்குட்பட்ட இரண்டு ஒட்டகங்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கின்றன.

சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்லாத வண்ணம் ஒட்டகங்களை பராமரிக்கும்படி ஒட்டக உரிமையாளர்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

road
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap