UAE Tamil Web

“மன்னிக்க முடியாத குற்றம்” – இரு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்த நீதிமன்றம் – புஜைராவில் பரபரப்பு..!

court

திப்பா அல் புஜைராவின் கூப் பகுதியில் சிமெண்ட் தொழிற்சாலைக்கு பின்புறம் நடந்த  கொலை அமீரகத்தையே உலுக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். வளைகுடா நாட்டைச்சேர்ந்த இரண்டு நபர்கள் சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவரும் வளைகுடா நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சிமெண்ட் தொழிற்சாலைக்கு பின்புறம் காரில் கிடந்த சடலத்தை மீட்ட காவல்துறை, தீவிர விசாரணையில் இறங்கியது. இதன் பயனாக இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கியினால் சுடப்பட்டதால் இறப்பு நேர்ந்ததாக பிணக்கூறாய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, இரு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார். இந்த வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மற்றவர்களை நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

court
7 Shares
Share via
Copy link