UAE Tamil Web

திடீரென பற்றிய தீ – உயிரைப் பணையம் வைத்து தீயை அணைத்த தொழிலாளர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

worker 1

அஜ்மானில் ஷாப்பிங் சென்டருக்கு அருகே நிகழ்ந்த இரு தீ விபத்துகளை உடனடியாக அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்த இரண்டு தொழிலாளர்களுக்கு பாராட்டு குவிந்துவருகிறது.

இரு தொழிலாளர்களையும் அஜ்மான் சிவில் பாதுகாப்புத்துறை நேரில் வரவழைத்து பாராட்டியிருக்கிறது.

முதல் தீவிபத்து ஷாப்பிங் செண்டருக்கு அருகில் உள்ள வீட்டில் நேர்ந்திருக்கிறது. மற்றொரு விபத்து ஷாப்பிங் செண்டருக்கு வெளியே பார்க் செய்யப்பட்டிருந்த காரில் ஏற்பட்டிருக்கிறது.

worker
Image Credit: Khaleej Times

அஜ்மான் சிவில் பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரியான ரயீத் ஒபைத் அல் ஸாபி இதுகுறித்துப் பேசுகையில்,” தொழிலாளர்கள் தங்களது கடமைகளை மறுக்காமல் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய செயல் பாராட்டுக்குரியது” என்றார்.

சமூகத்திற்கு இக்கட்டான நேரங்களில் உதவி செய்யும் பொதுமக்களுக்கு அமீரக அதிகாரிகள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

worker 1
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap