UAE Tamil Web

ஒரே டிராவில் 20 பேருக்கு அடித்த ஜாக்பாட் – இந்த வார மஹ்சூஸ் டிரா முடிவுகள்..!

mahzooz

அமீரகத்தின் பிரபல டிராவான மஹ்சூஸ்-ன் 58 வது வார டிரா நேற்று நடைபெற்றது. இதில் மொத்த பரிசுத்தொகையான 1,603,800 திர்ஹம்ஸ் தொகைக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த வார டிராவின் இரண்டாவது பரிசான 10 லட்சம் திர்ஹம்ஸ் தொகையை 20 அதிர்ஷ்டசாலி நபர்கள் வென்றுள்ளனர். அதாவது ஐந்தில் நான்கு எண்களை (2, 14, 40, 43, 45) சரியாகத் தேர்ந்தெடுத்த 20 நபர்களுக்கு தலா 50 ஆயிரம் திர்ஹம்ஸ் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதேபோல, ஐந்தில் மூன்று எண்களை சரியாகத் தேர்ந்தெடுத்த 868 நபர்களுக்கு தலா 350 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை பிரித்து அளிக்கப்பட்டது.

அசிம், ஷோயப் மற்றும் சோனி ஆகிய மூன்று அதிர்ஷ்டசாலி நபர்கள் தலா 1 லட்சம் பரிசினைப் பெற்றுள்ளனர்.

இருப்பினும் வரும் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்ட டிராவில் 10 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகைக்கான குலுக்கல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹ்சூஸ் டிராவில் கலந்துகொள்வது எப்படி எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

mahzooz
6 Shares
Share via
Copy link