UAE Tamil Web

ஷார்ஜா: 70 வயது கிழவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய பெற்றோர் : தற்கொலை செய்துகொண்ட 21 வயது இளம்பெண்..!

Fall From Building

ஷார்ஜாவின் முவெய்லி பகுதியில் வசித்துவரும் ஆசியாவைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார்.

சொந்த நாட்டில் உள்ள 70 வயது ஆணைத் திருமணம் செய்துகொள்ளும்படி அப்பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தியிருக்கின்றனர். தனக்கு வயதானவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை, தான் படிக்கவேண்டும் என அப்பெண் தனது பெற்றோருடன் சண்டையிட்டிருக்கிறார்.

இருப்பினும் இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அப்பெண்ணிற்கு இடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. சொந்த நாட்டிற்குத் திரும்பி, வயதானவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர் கூறவே, இளம்பெண் மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார்.

இதனால் அவரது கபாலப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்திருக்கிறது. அவர்களின் மீது பொதுவழக்குத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.