UAE Tamil Web

கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த சந்தேகமா? – அவசர கால உதவி எண் வெளியீடு!

கொரோனா பெருந்தொற்று இன்னுமே முழுமையாக நீங்காத நிலையில் அபுதாபியில் ஒருசில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்தும் விதமாக அபுதாபி அவசர பேரிடர் மேலாண்மை கமிட்டி 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்களை வெளியிட்டுள்ளது. கட்டணமில்லா சேவையான 8001717 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கொரோனா தொற்று குறித்த சந்தேகம், தடுப்பூசி போடும் இடங்கள், மனநல பிரச்னைகளுக்கான தீர்வு, அபுதாபிக்குள் நுழைவதற்கான சட்டத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வித சந்தேகங்களையும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் தெளிவு பெறலாம் என அபுதாபி அவசர பேரிடர் மேலாண்மை கமிட்டி அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களும் அபுதாபி நிலைமைகளை அறிந்து கொள்ள அதே எண்ணை +971 ISD Code இணைத்து தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Share
Share via
Copy link