அமீரகத்தில் 2G இணைய சேவை டிசம்பர் 2022ல் முடிவுக்கு வந்துவிடும் என Telecommunications and Digital Government Regulatory Authority (TDRA) தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் இணைய சேவையானது மின்னல் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்படுகின்றன. 5G இணைய சேவையில் வல்லரசு நாடுகளைக் காட்டிலும் துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் சிறப்பான சேவைகள் கிடைக்கின்றன. அரபுலகில் 5G சேவையை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பெருமை அமீரகத்தையே சாரும்.
இந்த நிலையில் 5G தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக 2G இணைய சேவை வழங்கும் மொபைல் போன்களின் விற்பனை அமீரக சந்தையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறுத்தப்படும் என TDRA ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது முற்றிலுமாக 2G சேவை டிசம்பர் 2022ல் நிறுத்தப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1994ல் அமீரகத்தில் 2G சேவை அறிமுகப்படுத்தப்பட்டு சிறந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விதமாக பழைய தொலைதொடர்பு சேவையான 2Gக்கு குட்பை சொல்ல தயாராகி வருகிறது அமீரகம்
