நவம்பர் 20 ஆம் தேதி அமீரகத்தில் துவங்கப்பட்ட ஷேக் சயீத் கலாச்சாரத் திருவிழாவின் ஒரு பகுதியாகவும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் அபுதாபியின் அல் வத்பா பகுதியில் பிரம்மாண்ட வானவேடிக்கைகள் நிகழ இருக்கின்றன.
35 நிமிடங்கள் நீடிக்க இருக்கும் இந்த வானவேடிக்கை உலகின் முதல் கிரந்தோலா (Girandola) வானவேடிக்கையாகும். நேர்கோட்டில் நிகழும் உலகின் மிக பிரம்மாண்ட வான வேடிக்கை இதுவாகத்தான் இருக்கும்.
இந்த வானவேடிக்கை நிகழ்ச்சிகள் டிசம்பர் 31, மாலை 3 மணிக்குத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானவேடிக்கைகளில் உலக சாதனைகள் படைப்பது அமீரகத்திற்கு புதிதல்ல.
New Year’s at @ZayedFestival means unforgettable moments for the whole family. Be there for the largest, longest-running fireworks display, set to break two Guinness World Records, alongside other events and activities. We’ll see you on December 31st at 3 PM!#SheikhZayedFestival pic.twitter.com/9TbNiCnS7n
— Abu Dhabi Calendar (@InAbuDhabi) December 26, 2020
ஏற்கனவே, கடந்தாண்டு ராஸ் அல் கைமாவில் அதிக ஆளில்லா பறக்கும் இயந்திரங்கள் மூலம் வானவேடிக்கைகள் நிகழ்த்தியது (Most Unmanned Aerial Vehicles for Launching Fireworks Simultaneously), நீண்ட வானவேடிக்கை நீர்வீழ்ச்சி (Longest Fireworks Waterfall) ஆகியவை உலக சாதனை படைத்தன. இந்த சாதனைகளை இந்த வருடம் நிகழ இருக்கும் பிரம்மாண்ட வானவேடிக்கைத் திருவிழா முறியடிக்க இருக்கிறது.