அமீரகத்தில் மஹ்சூஸ் கிராண்ட் டிராவில் 36 வெற்றியாளர்கள் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.
துபாயில் நேற்றிரவு நடைபெற்ற 60வது நேரடி மஹ்சூஸ் கிராண்ட் டிராவில், 36 வெற்றியாளர்கள் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசைப் பகிர்ந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வெற்றி எண்களில் (4, 16, 17, 22, 29) நான்கைப் பொருத்திய வெற்றியாளர்கள் தலா 27,777 திர்ஹம்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். மேலும், 1,433 பங்கேற்பாளர்கள் ஐந்து எண்களில் மூன்றைப் பொருத்தி, மூன்றாவது பரிசாக தலா 350 திர்ஹம்களைப் பெற்றனர்.
ரேஃபிள் டிராவில் மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தலா 100,000 திர்ஹம்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். வெற்றி பெற்ற ராஃபிள் ஐடிகள் முறையே 10183728, 9995417, 10205788. இது முறையே டேனெல்லே, மைக்கேல் மற்றும் முபாஷிர் ஆகியோருக்கு சொந்தமானது.
சனிக்கிழமை இரவு நடந்த டிராவில் வென்ற மொத்த பரிசுத் தொகை 1,801,550 திர்ஹம்கள்.
10 மில்லியன் திர்ஹம் பரிசு
முதல் பரிசான 10,000,000 திர்ஹம் வெல்வதற்கான வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. ஜனவரி 22 அன்று அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு மஹ்சூஸ் கிராண்ட் டிராவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹ்சூஸ் குலுக்கலில் ஒரு தண்ணீர் பாட்டிலை சேவை அமைப்புகளுக்கு நீங்கள் நன்கொடையாக கொடுக்க வேண்டும். ஒரு பாட்டிலின் விலை 35 திர்ஹம்ஸ். இதன் மூலமாக டிராவில் கலந்துக்கொள்ள உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். எத்தனை பாட்டிலை வாங்குகிறீர்களோ அத்தனை முறை நீங்கள் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். தற்போது பங்கேற்பாளர்கள் ராஃபிள் டிராவில் தானாக நுழைய முடிகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் மூன்று உறுதியான வெற்றியாளர்கள் இடம்பெறுவார்கள்.
மஹ்சூஸ் என்றால் அரபு மொழியில் ‘அதிர்ஷ்டசாலி’ என்பது பொருள்.