பணியிலிருந்து திரும்பும் தன் அப்பாவிற்கு கைகாட்ட ஆசையாய் ஓடிச்சென்ற 4 வயது பெண் குழந்தை மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது ராஸ் அல் கைமாவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எப்போதும் தனது அப்பா பணி முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது மாடியில் இருந்து அவருக்கு கைகாட்டுவது கயா-வின் வழக்கம். எப்போதும் உறவினர் துணையுடன் அவர்களது வில்லாவில் உள்ள பால்கனியில் இருந்துதான் அப்பாவிற்கு கைகாட்டுவாள் கயா.
அன்றைய தினம், அருகில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அப்பாவின் கார் சத்தத்தைக் கேட்டதும் தானாகவே பால்கனிக்கு ஓடியிருக்கிறாள். அப்போதுதான் அந்த மோசமான விபத்து நேர்ந்திருக்கிறது.
இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமியை துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், கயாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 29 ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கயா நேற்று இரவு மரணத்திருக்கிறாள். கபால எலும்பு சிதறியதால் மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டதே சிறுமியின் இறப்பிற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கயாவின் மரணம் அவரது பெற்றோர், உறவினர், நண்பர்கள் மட்டுமன்றி அப்பகுதியில் வசித்துவரும் அனைவரையுமே கலங்கடித்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
