அமீரகத்தில் உள்ள, ஏறக்குறைய பாதி நிறுவனங்கள் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க கடுமையான பட்ஜெட்டில் ஈடுபட்டுள்ளன என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகப் பணவீக்கப் போக்குகள் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மிக அதிகமாக இருப்பதாக Aonன் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது நிறுவனம் மற்றும் பணியாளர் செலவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிபிடத்தக்கது.
Aonன் இந்த ஆய்வு அனைத்து துறைகளிலும் உள்ள 150 நிறுவனங்களை உள்ளடக்கியது. அதிகரித்த பணவீக்க விகிதங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள இது நடத்தப்பட்டுள்ளது.
ஊழியர்களின் ஊதியம் சந்தை விகிதத்தை விட குறைவாக இருப்பதால் சம்பள உயர்வு அவசியம் என்று பதினைந்து சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், குறைந்த ஊதியம் காரணமாக மக்கள் தங்கள் வேலையை மாற்றுவதாகவும் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 27 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இறுதியாக, 23 சதவீதம் பேர் பணவீக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்துவது முக்கியம் என்று கூறியுள்ளனர்.