அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அஜ்மானில் போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அஜ்மானின் பட்டத்து இளவரசரும் அஜ்மான் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 21 – டிசம்பர் 31 ஆம் தேதிவரையில் மட்டுமே இந்த வசதியை மக்கள் பயன்படுத்தமுடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்டணத்தை செலுத்த விரும்புவோர் Sahl மூலமாகவோ அல்லது உட்கட்டமைப்புத்துறையின் இணையதளத்திலோ அல்லது அஜ்மான் காவல்துறையின் சேவை மையத்திற்கு நேரில் சென்றோ அதனை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
