UAE Tamil Web

ஷார்ஜா: போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி – அரசு அறிவிப்பு..!

traffic

அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஷார்ஜாவில் போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா நிர்வாகக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமத்தின் மீது இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை மீட்கவும் இந்தத் தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21, 2021 – ஜனவரி 31, 2022 ஆம் தேதிவரையில் மட்டுமே இந்த வசதியை மக்கள் பயன்படுத்தமுடியும் என நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக அஜ்மானிலும் இதேபோன்று அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

traffic
10 Shares
Share via
Copy link