UAE Tamil Web

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 50 GB டேட்டா இலவசம் ; எதிசலாட் அறிவிப்பு – ஆனால் இவர்களுக்கு மட்டும்தான்..!

etisalat

அமீரக யூனியன் உருவான 50 வது ஆண்டுவிழா நாளை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் அமீரகத்தின் பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான எதிசலாட் அமீரக தேசிய தின ஆஃபராக இலவச 50GB டேட்டாவை வழங்குவதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இது எமிராட்டி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. *50# என்ற எண்ணிற்கு டயல் செய்து 50GB டேட்டாவை மக்கள் இலவசமாகப் பெறலாம். டிசம்பர் 7 ஆம் தேதிவரையில் இந்த ஆஃபர் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap