UAE Tamil Web

அமீரகத்தில் நாளைமுதல் விடுமுறை துவக்கம் – உங்களுடைய பிளான் என்ன..?

uae_public_holidays_resources1_

ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு அமீரகத்தில் நாளை முதல் விடுமுறை துவங்க இருக்கிறது. ஜூலை 19 ஆம் தேதிமுதல் ஜூலை 22 ஆம் தேதிவரையிலான 4 நாட்களுக்கு தனியார் துறை பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஜூலை 19 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதிவரையில் அமீரக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் தேதி அவர்கள் பணிக்குத் திரும்பவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வார இறுதி விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறையை அனுபவிக்க இருக்கிறார்கள் அமீரக அரசுத்துறை ஊழியர்கள்.

இதனால் இந்த விடுமுறைக் காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க பலரும் திட்டமிட்டு வருகிறார்கள். இந்நிலையில் விடுமுறை நாட்களில் வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

uae_public_holidays_resources1_
0 Shares
Share via
Copy link