UAE Tamil Web

60 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை – 188 பேர் பலி – அஞ்சலி செலுத்திய அமீரக அரசு..!

rain

கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் லக்ஸம்பர்க், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ஐரோப்பாவில் பெய்த கனமழையினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்டோர் வாழ்வில் மீண்டும் வசந்தம் மலர வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நாடுகளின் அரசோடு இந்த கொடுமையான காலத்தில் அமீரகம் எப்போதும் கரம் கோர்த்து நிற்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பவேரியா மாகாணம் கன மழையினால் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உதவிட நிதியை ஒதுக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் தெரிவித்துள்ளார். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழையை ஜெர்மனி சந்தித்துள்ளது. இதனால் 188 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வாடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போதும் நாட்டின் வட பகுதியில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக நெதர்லாந்தில் கன மழையினால் பலி ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் முக்கிய நதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிவருகிறது. இதனால் அங்கே இன்னும் வெள்ள எச்சரிக்கை அமலில் இருக்கிறது.

rain
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap