அமீரகத்தின் பிரபல விமான நிறுவனத்தில் காலியாக உள்ள 500 கஸ்டமர் சர்வீஸ் ஏஜெண்ட் பணியிடங்களை நிரப்ப இருக்கிறது அடெக்கோ நிறுவனம். இதற்கான இண்டர்வியூ வரும் அக்டோபர் 11 ஆம் தேதி துபாயில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வாடிக்கையாளர் சேவைத் துறையில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் வைத்திருப்பவராகவும், ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் பற்றிய அடிப்படி அறிவைக் கொண்டவராகவும் சிறந்த தொலைபேசி உபயோகிப்பாளராகவும் இருத்தல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரபி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது கூடுதல் தகவல். அடெக்கோ நிறுவனத்தால் இந்த நேர்காணல்கள் நடத்தப்பட இருக்கின்றன.
நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம்
அக்டோபர் 11 திங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புர் துபாயில் உள்ள ஹோட்டல் ஹாலிடே இன்னில் (Holiday Inn) நேர்காணல் நடைபெறும்.
நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது CV, ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஒரு முழு அளவிலான புகைப்படத்தை எடுத்து வர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏறக்குறைய 5,000 திர்ஹம் சம்பளம் பெறுவார்கள் மேலும் அவர்களுக்கு போக்குவரத்து சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
