அமீரகத்தின் பிரபல விமான நிறுவனத்தில் காலியாக 500 கஸ்டமர் சர்வீஸ் ஏஜெண்ட் பணியிடங்களை நிரப்ப அடெக்கோ நிறுவனம் இன்று நேர்காணலை நடத்துவதாக அறிவித்திருந்தது.
அக்டோபர் 11 திங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புர் துபாயில் உள்ள ஹோட்டல் ஹாலிடே இன்னில் (Holiday Inn) நேர்காணல் நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் இன்று நேர்காணலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
இதற்குக் காரணம் நேர்காணல் நடைபெற இருந்த ஹோட்டலின் முன்னால் குவிந்த விண்ணப்பதாரர்கள் தான். காலை 7 மணிக்கே ஏராளமான மக்கள் ஹோட்டலின் முன்பு குவிய, அதிகாரிகளால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கிறது.
அத்துடன் வின்னப்பதாரர்களில் பலர் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்ததாலும் வேறு வழியில்லாமல் நேர்காணலை ரத்து செய்வதாக அடெக்கோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.
