37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்புவோர் இந்திய அரசு அங்கீகரித்திருக்கும் மையங்களிலும் PCR கொரோனா பரிசோதனை எடுக்கலாம் – அமீரக விமான நிறுவனங்கள் அறிவிப்பு..!

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah

அமீரக விமான நிறுவனங்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட பயண வழிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளன. அதில், அமீரகம் திரும்ப இருக்கும் பயணிகள் தங்களுடைய நாட்டில் அமீரக அரசு பரிந்துரை செய்திருக்கும் ஆய்வகங்கள் இல்லாதபட்சத்தில், அவர்களுடைய நாடு அங்கீகரித்திருக்கும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திற்கு வரும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் மற்றும் அமீரகம் வழியாக பிற நாடுகளுக்குப் பயணிப்போர் என அனைவரும் தங்களுடைய பயணத்திற்கு முன்னதான 96 மணி நேரத்திற்குள் தங்களுடைய நாடுகளில் அமீரக அரசு அங்கீகரித்திருக்கும் ஆய்வகங்களில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும் என்ற விதிமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மித மற்றும் தீவிர உடல் உபாதைகள் கொண்டோருக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்படுகிறது.

எதிஹாட் விமான நிறுவனம் முன்பு வெளியிட்டிருந்த தகவலின்படி, பயணிகள் தங்களது நாடு அல்லது நகரங்களில் ப்யூர் ஹெல்த் ஆன்லைன் போர்ட்டலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆய்வகங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனையானது எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து அமீரகம் வருவோரில் தங்களுடைய நகரங்களில் உள்ள ஆய்வகங்கள் எதுவும், ப்யூர் ஹெல்த் ஆன்லைன் போர்ட்டலின் பட்டியலில்  இல்லையெனில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அங்கீகரித்திருக்கும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளலாம் என இன்று தெரிவித்திருக்கிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்களும் ICMR அங்கீகரித்திருக்கும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பிரிண்ட் எடுத்து வரவேண்டும் என தனது பயணிகளுக்கு எதிஹாட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் நினைவுபடுத்தியிருக்கின்றன.

இதையும் படிங்க.!