அஜ்மான் : ருமைலா பகுதியில் கடலில் நீந்தச் சென்ற நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்திருக்கிறார். கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில் இருந்தவரை கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபர் ஒருவர் பார்த்திருக்கிறார்.
உடனே, அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார் அந்நபர். இதனைடுத்து நான்கு காவல்துறை அதிகாரிகள் நீருக்குள் பாய்ந்து மயங்கிய நபரை மீட்டு கரைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். உடனே அவரை ஷேக் கலீஃபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள் இந்த அதிகாரிகள்.
முதன்மை உதவியாளர் அஹ்மத் அப்துல்லா அல்-அமிரி, ஸ்பெஷல் டாஸ்க் பிரிவைச் சேர்ந்த அலி முஹம்மது அல் மதானி, கார்ப்ரல் அப்துல் ரஹ்மான் அல் பலுஷி ஆகியோர் தான் இந்த அதிரடி செயலை நிகழ்த்தியவர்கள்.
இதனையடுத்து அஜ்மான் காவல்துறையின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முகமது ஷைபான் சுவைதான் இவ்வீரர்களை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.
பிறரது நலம் மற்றும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதும் இவ்வீரர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள் என சுவைதான் புகழாரம் சூட்டினார்.
