UAE Tamil Web

உலகின் சிறந்த செயலியாக அமீரகத்தின் ‘அல் ஹொசன்’ செயலிக்கு அமெரிக்கா விருது..!

அமீரகத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்கள் தங்களின் விவரங்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில் ‘அல் ஹொசன்’ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சத்தின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறையில் சிறப்பான பயன்பாடு காரணமாக அமெரிக்காவின் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயலியாக ‘அல் ஹொசன்’ செயலிக்கு குளோபல் எக்சலன்ஸ் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் சிறப்பான சேவையை வழங்கி வருவதால் சிறந்த செயலிக்கான விருதை அல் ஹொஸன் பெற்றது.

இந்த செயலி சுகாதார சேவையை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், கொரோனா பரவலை தடுப்பதற்கும் முக்கியான பங்களிப்பை வழங்கி வருகிறது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து அமீரக அரசு இந்த செயலியை அதிக பயன்பாட்டுக்கு ஏற்படுத்தியது.

பொதுமக்கள் தாங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட விவரங்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். QR குறியீட்டின் மூலமும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலி அரபி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap