அமீரகத்தில் பொது இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் உள்ள கிரீன் பாசை காட்ட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. முன்னதாக கிரீன் பாஸ் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களாக இருந்தது. இந்நிலையில் இதனை 14 நாட்களாகக் குறைப்பதாக அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து PCR டெஸ்ட் எடுத்துக்கொண்டால் அவர்களது Alhosn அப்ளிகேஷனில் 30 நாட்களுக்கு கிரீன் ஸ்டேட்டஸ் எனப்படும் கிரீன் பாஸ் தோன்றும். 30 நாட்கள் கழிந்த பின்னர் மீண்டும் PCR டெஸ்ட் எடுத்தல் வேண்டும்.
இந்தக் கால அளவைத்தான் அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தற்போது 14 நாட்களாகக் குறைத்துள்ளது. இந்தப் புதிய விதிமுறை டிசம்பர் 5 ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.