அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ராணுவம் சார்பில் மேற்கொள்ளப்பட இருப்பதாக அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் செப்டம்பர் 18ம் தேதி வரை முக்கிய சாலைகளில் ராணுவ வாகனங்கள் உலா வரும் என்றும் படப்பிடிப்பு என எண்ணி புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ராணுவ ஒத்திகைக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. சாலைகளில் ராணுவம் மற்றும் காவல்துறை வாகனங்களை கண்டால் வழிவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது