அமீரகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டஸை காண்பிக்க வேண்டும் என அரசு ஊடகமான WAM தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் மற்றும் அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி ஜனவரி 3, 2022 ஆம் தேதிமுதல் இந்த செயல்பாடு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
الهيئة الوطنية لإدارة #الطوارئ_والأزمات والكوارث ووزارة الصحة ووقاية المجتمع: اعتماد تطبيق نظام المرور الأخضر لدخول جميع الجهات الحكومية الاتحادية للموظفين والمراجعين في كافة إمارات الدولة والتي ستقتصر على المطعمين وأصحاب الفئات المستثناة من التطعيم، وذلك ابتداءً من 3 يناير 2022. pic.twitter.com/Hvdsbc5Qs0
— NCEMA UAE (@NCEMAUAE) December 19, 2021
அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் மற்றும் பூஸ்டர் டோசினை எடுத்தவ அனைவருக்கும் இது பொருந்தும். இருப்பினும் இவர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் PCR டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். அதன்மூலமே கிரீன் ஸ்டேட்டஸ் ஆக்டிவில் இருக்கும்.
தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருந்து விலக்குப் பெற்றவர்களும் 7 நாட்களுக்கு ஒருமுறை PCR டெஸ்ட் எடுப்பதன் மூலம் தங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டசை தக்கவைக்கலாம்.
16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் எவ்வித ஆய்வக பரிசோதனை முடிவுகளையும் எடுத்துவரவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Alhosn அப்ளிகேஷனில் Grey நிறத்தில் ஸ்டேட்டஸ் இருப்பவர்கள் (சரியான நேரத்தில் PCR பரிசோதனை எடுக்காதவர்கள்) அரசு அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல, பொதுமக்கள் பூஸ்டர் டோசினை உடனடியாக எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.