UAE Tamil Web

திடீரென ஏற்பட்ட பிரசவ வலி ; மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடியாததால் வேறு வழியின்றி ரிஸ்க் எடுத்த 4 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்..!

baby

ஈத் அல் அத்ஹாவின் மூன்றாம் நாள். கோர் ஃபக்கானில் இருந்து தேசிய ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. தனக்கு பிரசவ வலி வந்துவிட்டதாகவும் உடனடியாக உதவுமாறும் ஒரு பெண் பேசியிருக்கிறார். அடுத்த வினாடியே குழு தயாரானது. இரண்டு ஆம்புலன்ஸ்களில் 4 மருத்துவப் பணியாளர்கள் பெண் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள்.

ஆயிஷா அல்சாதி (Aisha Alsaadi), லத்திபா அல்ஹான்தூபி (Latefah Alhantoobi), மிச்செல் சான் ஜுவான் (Michael San Juan) மற்றும் ஜான்ஃபிரே பேசிஸ் (Johnfrey Pacis)  ஆகியோர் தான் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.

பெண்ணிற்கு உடனடியாக பிரசவம் பார்க்க வேண்டிய சூழல் இருந்ததால் ஆயிஷா அல்சாதி, லத்திபா அல்ஹான்தூபி ஆகிய இரண்டு பெண் செவிலியர்களும் துணிச்சலாக பிரசவத்திற்கான மருத்துவ வழிமுறைகளை பின்பற்றத் துவங்கினர்.

சற்று நேரத்திற்கெல்லாம் அப்பெண் அழகிய ஆண் குழந்தையினை பெற்றெடுத்தார் அந்தப்பெண். செவிலியர்கள் கவனமாக தொப்புள்கொடியை பிரித்து, உடனடியாக மருத்துவமனைக்கு தாய், செய் இருவரையும் அழைத்துச் சென்றனர்.

ஈத் அல் அத்ஹா அன்று பரிசு போல குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள் என தேசிய ஆம்புலன்ஸ் தெரிவித்திருக்கிறது.

கர்ப்பவதிகள் தங்களது மருத்துவரை சரியான இடைவெளியில் சந்தித்து ஆலோசனைகளை பெறுதல் வேண்டும் ; எப்போது குழந்தை பிறக்கும் என்பதை முன்கூட்டியே மருத்துவர்களின் உதவியோடு அறிந்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

baby
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap