UAE Tamil Web

“அமீரகத்தையும் அதன் மக்களையுமே அவர் அதிகமாக நேசிக்கிறார்” – அபுதாபி இளவரசரை புகழ்ந்த துபாய் ஆட்சியாளர்..!

dubai ruler and abudhabi prince

அமீரகத்தின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து நேற்று அல் மர்மூம் மாளிகையில் சிறப்பு சந்திப்பு நடைபெற்றது. இதில், அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படை தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து விவாதித்தனர்.

இதுகுறித்து துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அபுதாபியின் இளவரசர் அமீரகத்தையும் அதன் மக்களையும் எப்போதுமே முதன்மையானதாக நினைக்கிறார். இந்த நல்ல மனிதரின் முயற்சிகள் மூலமாக அமீரகம் மேலும் வளர்ச்சியடையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபி இளவரசர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அமீரகத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய தலைமையின்கீழ் நீடித்த செயல்பாடுகள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் மூலமாக அமீரகம் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

dubai ruler and abudhabi prince
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap