ரமலான் மாதத்திற்கான முதல் பிறை இன்று பார்க்கப்பட்டதாக சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அமீரகத்திலும் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பிறை பார்ப்பது தொடர்பான சந்திப்பிற்கு பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Saturday, 2nd April 2022 announced as first day of the holy month of #Ramadan in the #UAE #WamNews pic.twitter.com/n0dWt4X1Uh
— WAM English (@WAMNEWS_ENG) April 1, 2022
பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து, நாளை முதல் (ஏப்ரல் 2,2022) ரமலான் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரமலான் மாதத்தில் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் 30 நாட்கள் நோன்பு நோற்று இம்மாதம் முழுவதும் இறை வணக்க வழிபாடுகளிலும், கொடுத்து உதவுவதிலும் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.