36.9 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

ஈத் அல் பித்ர் பண்டிகைத் தேதி அறிவிக்கப்பட்டது!

eid al fitr crescent

ஷவ்வால் பிறை இன்று (வெள்ளிக்கிழமை) தென்படாததால், ஈத் அல் பித்ர் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24) கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 23, ரமலான் மாதத்தின் கடைசிநாள் எனக் கணிக்கப்பட்டிருப்பதால் ஷவ்வால் மே 24 அன்று துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மே 24 அன்றே ஈத் அல் பித்ர் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷவ்வால் பிறை தென்படாததால் ஞாயிற்றுக்கிழமை (மே 24) ஈத் அல் பித்ர் பண்டிகை கொண்டாடப்படும் என சவூதி அரேபியா அறிவித்திருந்தது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த வருட ஈத் அல் பித்ர் தொழுகையை மக்கள் வீட்டிலேயே மேற்கொள்ளும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூட்டமாக ஒன்றிணைய வேண்டாம் எனவும், சமூக விலகலைக் கடைபிடிக்கும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மற்ற சில பதிவுகள்