UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களுக்கான பணிநேரம் குறைப்பு..!

Ramadan (3)

ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் இயங்கும் நேரத்தை குறைக்குமாறு அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணி நேரங்களில் இருந்து இரண்டு மணி நேரம் குறைவாக இயங்குமாறு அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, அமீரக அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கான ரமலான் மாத பணிநேரம் குறித்த சுற்றறிக்கையை அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

அதன்படி மேற்கண்ட துறைகளில் பணிபுரியும் நபர்கள் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரையில் பணிபுரியவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பணிநேரங்கள் தேவைப்படும் பொறுப்புகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலமுறை பொருந்தாது எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறை தென்படுவதைப் பொருத்து ஏப்ரல் 13 ஆம் தேதி ரமலான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.