தடுப்பூசி போடாத குடிமக்களுக்கு இன்று முதல் பயணத் தடை விதிப்பதாக அமீரகம் அறிவித்துள்ளது.
தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் மற்றும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்களும் கோவிட்-19 பூஸ்டர் டோஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.
மருத்துவ காரணங்களால் தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு இந்த முடிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. உலகளாவிய தொற்றுநோயியல் நிலைமை மற்றும் தற்போதைய அதிக நோய்த்தொற்றுகள் காரணமாக, குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
பயணத்தின் தேசிய நெறிமுறையின்படி தடுப்பூசி போடப்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் பெற வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தடுப்பூசி போடப்படாத குடிமக்கள், தடுப்பூசி எடுப்பதில் இருந்து மருத்துவ விலக்கு பெற்ற குடிமக்கள், மருத்துவ மற்றும் சிகிச்சை நோக்கங்களுக்காக செல்பவர்களுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து பயணிகளும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதை உறுதிசெய்வது அவசியமாகும். பயணத்தின் போது, தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#NCEMA and @MoFAICUAE: Ban on Travel on UAE citizens unvaccinated with #Covid19 vaccine, starting Jan 10, 2022, with a requirement to obtain the booster dose for the fully vaccinated. With an exemption for medically exempted from taking the vaccine, humanitarian & treatment cases pic.twitter.com/zUw1FoSLBt
— NCEMA UAE (@NCEMAUAE) January 1, 2022