UAE Tamil Web

உங்களுக்கு கோல்டன் விசா கிடைக்க வாய்ப்பு இருக்கா..? ஈசியா தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

golden visa

குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு நாட்டு மக்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியது அமீரக அரசு. அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் அவர்களுடைய ஆணைக்கு இணங்க கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலமாக இதுவரையில் பல்வேறு மக்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு இந்த விசா கிடைக்குமா? அதற்கு நீங்கள் தகுதியானவரா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இதற்காகவே அபுதாபி குடியிருப்பாளர் அலுவலகம் புதிய வசதி ஒன்றினை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடிந்தால் நீங்கள் விசாவைப் பெற தகுதி படைத்தவர் என அறிந்துகொள்ளலாம். சரி கேள்விக்குப் போகலாம் வாங்க..

2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் டெப்பாசிட் அல்லது தொழில் அல்லது நிறுவனம் அல்லது ஒரு நிறுவனத்தில் 2 மில்லியன் மதிப்புள்ள பங்கை (Share) வைத்திருக்கிறீர்களா?

அப்படியானால் உங்களுடைய வரி செலுத்திய விபரம் மற்றும் டெப்பாசிட் அல்லது தொழில் அல்லது நிறுவனம் அல்லது Share வாங்கியதற்கான முழுமையான ஆவணங்களை கோல்டன் விசா விண்ணப்பத்தின்போது சமர்ப்பிக்கவேண்டும்.

கோல்டன் விசாவிற்குத் தகுதி படைத்த முதலீட்டாளரின் நிறுவனத்தில் மூத்த இயக்குனர் போன்ற முக்கிய பதவி வகிக்கிறீர்களா?

நிர்வாக இயக்குனர் மற்றும் அதுபோன்ற பதவிகளில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக இருந்து, அடமானம் ஏதுமில்லாத 2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் உங்களுக்கு அமீரகத்தில் சொத்து இருக்கிறதா?

2 மில்லியன் திர்ஹம்ஸ் தொகைக்கு மேற்பட்ட மதிப்புடைய சொத்துகள் அடமானத்தில் இருக்கலாம். ஆனால் அவை விதிமுறைக்குட்பட்டது. மேற்பட்ட தகவலுக்கு அபுதாபி குடியிருப்பு அலுவலகத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.

அமீரக அரசால் அனுமதிக்கப்பட்ட துறைகளில் 5 லட்சம் மதிப்பில் தொழில் துவங்க இருக்கும் தொழில்முனைவோரா நீங்கள்?

கோல்டன் விசாவிற்குத் தகுதி படைத்த தொழில்முனைவோரிடம் நிர்வாக ரீதியில் பெரிய பதவியில் இருப்பவரா நீங்கள்?

நிர்வாக இயக்குனர் மற்றும் அதுபோன்ற பதவிகளில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அமீரகத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் படித்த தலைசிறந்த மாணவரா நீங்கள்?

அமீரகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 3.8 GPA வுடன் பட்டம் பெற்ற மாணவரா நீங்கள்?

GPA 4.0 என்ற அளவீட்டில் இது கணக்கிடப்படுகிறது. அரசு இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதற்கு இணையான மதிப்பெண் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அபுதாபி அரசிடம் உரிமம் பெற்று அமீரக விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரா நீங்கள்..? தற்போது இந்த துறையில் பணிபுரிந்து வருகிறீர்களா?

மருத்துவர்கள் எவ்வாறு கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிப்பது எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மிகவும் மதிப்பு வாய்ந்த பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் தற்போது முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வருகிறீர்களா?

முக்கிய துறைகளாக வரையறுக்கப்பட்டுள்ளவை: தொற்றுநோய் மற்றும் வைராலஜி, செயற்கை நுண்ணறிவு (AI), பிக் டேட்டா (Big Data), கணினி பொறியியல், மின்னணுவியல், மென்பொருள் பொறியியல், சக்தி பொறியியல் (Power Engineering), மரபணுப் பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப பொறியியல்.

எமிரேட்ஸ் சயின்டிஸ்ட் கவுன்சில் அல்லது முகமது பின் ரஷீத் அறிவியல் சாதனைக்கான விருது பெற்ற விஞ்ஞானியா?

இந்த அறிவிப்பினை உம் அல் குவைன் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி ஆகஸ்டு 16 ஆம் தேதி வெளியிட்டது.

அமீரகம் அல்லது வெளிநாட்டில் படைப்பூக்கத்துடன் இயங்கக்கூடிய கலைஞரா?

சிறப்பு கலைத்துறைகள்: காட்சி கலைகள், வெளியீடு (Publishing), செயல்திறன் கலைகள், வடிவமைப்பு மற்றும் கைவினை, மின்னணு விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு, ஊடகம் மற்றும் பல

பேட்டண்ட் எனப்படும் உரிமம் பெற்ற கண்டுபிடிப்பாளரா நீங்கள்..? அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு உங்களுடைய கண்டுபிடிப்பு பங்களிப்பு செய்யுமா?

அபுதாபியின் பொது மற்றும் தனியார் துறைகளில் நிர்வாக இயக்குனர் பதவியில் இருக்கிறீர்களா?

முழுமையாக தேர்வு பெறவேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் இளங்கலை முடித்திருக்கவேண்டும், மாதம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் திர்ஹம் ஊதியம் பெறுபவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் அவசியம்.

அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த கல்விப் பணியில் ஈடுபடுபவரா?

முழுமையாக தேர்வு பெற, குறிப்பிட்ட துறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும். உதாரணம்: கல்வி, பயிற்சி, மேலாண்மை மற்றும் சிறப்பு தேவைகளைக் கொண்டவர்களைக் கவனித்தல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

குழந்தைகள் மேம்பாட்டுக்கல்வி மற்றும் குழந்தைகளின் ஆரம்ப கல்வி நிபுணரா? இந்தத் துறையில் குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் இருக்கிறதா?

ஆரம்பகால குழந்தைப்பருவ மற்றும் குழந்தை வளர்ச்சி துறைகளில் குழந்தை பருவ தொடர்பான உளவியல் ஆலோசனைகள், குடும்ப ஆதரவு தொடர்பான சமூக ஆலோசனைகள், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, தாய்ப்பால் மற்றும் பிரசவ ஆலோசனை, குழந்தைகளுக்கான ஹெமாட்டாலஜி (Hematology) மற்றும் புற்றுநோய், குழந்தை நுரையீரல் நோய்கள் மற்றும் பிற. சில துறைகள் மருத்துவம் செய்ய உரிமம் பெறாத நிபுணர்களையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு வீரர், பயிற்சியாளர், நடுவர், விளையாட்டு தெரபிஸ்ட், மருத்துவரா? அமீரகம் அல்லது வெளிநாடுகளில் விளையாட்டுப் பிரிவில் சாதனைகள் செய்தவரா?

விளையாட்டு பிரிவுகள் பின்வருமாறு: வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், விளையாட்டு சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவர்கள், விளையாட்டுத் துறை ஆளுமைகள், பிரபலங்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச பொது விளையாட்டு நபர்கள். ஒவ்வொரு விளையாட்டு வகையிலும் தனித்துவமான தேவைகளின் பட்டியல் உள்ளது. மேலும் விவரங்களுக்கு விசா வகையைப் பார்க்கவும்.

அமீரகத்தால் குறிப்பிடப்பட்ட துறையில் phD முடித்திருந்து, தற்போது அந்தத் துறையில் பணிபுரிகிறீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடிந்து அதற்கான சான்றுகளை வைத்திருக்கும்பட்சத்தில் அபுதாபி குடியிருப்பு அலுவலகத்தின் இணையதளத்தில் சென்று கோல்டன் விசாவிற்கு விண்ணப்பம் செய்யுங்கள். விசா கிடைக்க வாழ்த்துக்கள்.

golden visa
4 Shares
Share via
Copy link