UAE Tamil Web

5 வருடத்திற்கான விசா ; வெறும் 650 திர்ஹம்ஸில்.. விண்ணப்பிப்பது எப்படி?

Visa--GDRFA_work-permit

மார்ச் 21, 2021 அமீரக கேபினட் கூட்டத்தில் 5 வருடத்திற்கான மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசா (multiple entry tourist visa) வை அறிமுகப்படுத்தியது அரசு. இந்த விசாவை அனைத்து நாட்டினரும் பெறலாம் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கட்டணத்தை தற்போது 650 திர்ஹம்ஸ் ஆக நிர்ணயித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமீரக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் எப்படி இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பது என்பதை விளக்கியுள்ளது. அதுபற்றி பார்ப்பதற்கு முன்னால் இந்த விசாவைப் பற்றி மேலும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

இந்த விசாவைப் பெறுவதற்கு அமீரகத்தில் வசிப்பவர் அல்லது நிறுவனம் என யாரும் உங்களுக்கு ஸ்பான்சராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அதாவது உங்களுடைய சொந்த ஸ்பான்சர்ஷிப்பின் மூலமாக இந்த விசாவைப் பெறலாம்.

இந்த விசாவை நீங்கள் பெற்றால், ஒவ்வொரு முறை அமீரகம் வரும்போதும் அதிகபட்சமாக 90 நாட்கள் தங்கலாம். வேண்டுமென்றால் கூடுதலாக 90 நாட்கள் நீட்டித்துக்கொள்ளலாம்.

தற்போதைய நிலவரப்படி, டூரிஸ்ட் விசா வைத்திருப்பவர்கள் 30 அல்லது 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

துபாய் தவிர பிற எமிரேட்களுக்குச் செல்ல விரும்புவோர் ICA வின் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

துபாய்க்குச் செல்லவேண்டி விண்ணப்பித்திருந்தால் நீங்கள் GDRFA இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. ICA இணையதளத்தில் லாக்-இன் செய்யவேண்டும்.
  2. இணையதளத்தில் ‘E-channel Services’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பின்னர் Public services என்பதைத் தேர்வு செய்யவும்.
  4. விசா – மல்டிபிள் ட்ரிப்/ அனைத்து நாட்டினருக்குமான நீண்டகால டூரிஸ்ட் விசா (5 வருடங்களுக்கு)/ விசா வழங்குதல் (‘Visa – multi-trip / tourist long-term (5 years) for all nationalities / visa issuance’) என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. விண்ணப்பப் படிவத்தில் உங்களுடைய மற்றும் பாஸ்போர்ட் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யவேண்டும்.
  6. உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகிய தேவைப்படும் ஆவணங்களை உள்ளீடு செய்யவும்.
  7. கடந்த ஆறு மாதங்களில் 4000 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு சமமான மதிப்புடைய வெளிநாட்டு பணத்தினை நீங்கள் உங்களது வங்கிக் கணக்கில் வைத்திருக்கவேண்டும்.
  8. உங்களுடைய விண்ணப்பத்தை ஒருமுறை மீள் பார்வையிடவும்.
  9. பணம் செலுத்தவும்.

துபாய்க்குச் செல்லவேண்டி விண்ணப்பித்திருந்தால் நீங்கள் GDRFA இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Visa--GDRFA_work-permit
30 Shares
Share via
Copy link