UAE Tamil Web

ரஷியாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது அமீரகம்..!

vaccine trial

அமீரகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக ரஷியாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) எனும் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்துள்ளது.

- Advertisment -

இந்த மருந்து ஆற்றல் மிகுந்ததாகவும் ஆண்டிபாடிகளை சிறந்த முறையில் உருவாக்கும் திறனையும் பெற்றுள்ளதாகவும் NCEMA தெரிவித்துள்ளது.

அமீரக சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் திறனை சோதித்ததின் அடிப்படையில் இம்மருந்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

அமீரகத்தில் பயன்பாட்டிற்கு வரும் மூன்றாவது கொரோனா தடுப்பூசி இதுவாகும்.

முதலாவதாக சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அமீரகம் ஒப்புதல் அளித்தது.

அதன்பின்னர் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி, ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அமீரக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.