UAE Tamil Web

“என் வெற்றியை அமீரகத்திற்கு அர்ப்பணிக்கிறேன்”.. பிரான்ஸ் நாட்டின் உயரிய கௌரவத்தை பெற்ற பெண் ஓவியர் – பெருமைகொள்ளும் அமீரகம்

அமீரகம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு, அவருடைய கலைப் பணியை பாராட்டி அமீரக கலைஞர் அலியா ஜால் லூட்டா கடந்த மாதம் பிரெஞ்சு அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அமீரகத்திற்கான பிரெஞ்சு தூதர் சேவியர் சாட்டல், 2022 மே 30 அன்று பிரான்சின் Residence of Franceல் நடந்த அதிகாரப்பூர்வ விழாவில் லூட்டாவை “நைட் ஆஃப் ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்” (Knight of the Order of Arts and Letters) என்ற பட்டம் அளித்து அலங்கரித்தார்.

“பிரெஞ்சு அரசாங்கத்தின் சார்பாக பிரெஞ்சு தூதர் சேவியர் சேட்டல் அவர்களிடம் இருந்து நைட் பட்டம் பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று காட்சிக் கலைஞரும், கண்காணிப்பாளரும், ஆராய்ச்சியாளருமான லூட்டா இன்று திங்களன்று நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

“இது ஒரு மதிப்புமிக்க விருது மற்றும் இதற்கு அங்கீகரிக்கப்படுவதற்கு கடினமாக உழைத்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் இந்த வெற்றியை எனக்கு உறுதுணையாக இருந்த UAE அரசாங்கத்திற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்றார் அவர்.

1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Knight of the Order of Arts and Letters என்ற விருது கலை அல்லது இலக்கியத் துறைகளில் தங்களை வேறுபடுத்திக் கொண்டவர்களுக்கு அல்லது பிரான்சிலும் உலகிலும் கலைத் துறையில் பங்களித்த நபர்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுகிறது.

லூட்டவின் ஓவியங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டவை – இயற்கைக்காட்சிகள் மற்றும் பல வடிவங்களில் அவர் ஓவியம் வரைவதில் வல்லவர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap