UAE Tamil Web

அமீரகம்: அதிவேகத்தில் சென்ற ட்ரக் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே டிரைவர் மரணம்..!

Truck_

புஜைரா: சுக்ம்கம் (Sukmkum) பகுதியில் உள்ள யாப்சா சாலையில் இன்று மதியம் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த ட்ரக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக கவிழ்ந்திருக்கிறது. இந்த விபத்தில் ட்ரக் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ட்ரக்கில் இருந்த மற்றொருவர் காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தேசிய ஆம்புலன்ஸ் படை, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

உயிரிழந்தவரின் உடலும் அதே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Truck_
0 Shares
Share via
Copy link