UAE Tamil Web

கால் முறிந்த நிலையில் மலைப்பகுதியில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலமாக மீட்ட அமீரக காவல்துறை..!

Screengrab-of-injured-mountain-climber-being-airlifted-from-mountain-in-Ras-Al-Khaimah-on-Tuesday

ராஸ் அல் கைமாவின் வாதி நகாப் பகுதியில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட 46 வயது ஜெர்மனியைச் சேர்ந்த நபர் எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்திருக்கிறது.

இதனையடுத்து ராஸ் அல் கைமா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, தேசிய மீட்பு மற்றும் தேடுதல் படை ஹெலிகாப்டரில் சென்று காயம்பட்ட நபரை மீட்டிருக்கிறது.

அவர் சக்ர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கொரோனா வழிமுறைகளின் படி இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ராஸ் அல் கைமா காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மலையேற்றத்தில் ஈடுபடுவோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Screengrab-of-injured-mountain-climber-being-airlifted-from-mountain-in-Ras-Al-Khaimah-on-Tuesday
0 Shares
Share via
Copy link