UAE Tamil Web

ஊதிய பாதுகாப்பு முறையைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்க வேண்டும் – MOHRE

ஊதிய பாதுகாப்பு முறையைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குமாறு அமீரக ஆணையம் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்ட அமீரகம், சிறப்பான ஊதிய வழங்கு விதிமுறைகளைக் கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஊதிய பாதுகாப்பு முறையை (WPS) பயன்படுத்தி சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) தெரிவித்துள்ளது.

“சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதோடு, உற்பத்தித்திறனை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.இதனால் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் “ என MOHRE இன் ஆய்வு விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலர் மகேர் அல் ஓபேட் தெரிவித்துள்ளார்.

“பரஸ்பர சம்மதம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே முடிவடைந்த ஒப்பந்தங்களின்படி, நிலையான உறவுகளை வளர்ப்பதில் MOHRE ஆர்வமாக உள்ளது. சட்டப்பூர்வ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக, தொழிலாளி தனது வேலைக்கு ஈடாக அவரது ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும் அமைச்சகம் முயல்வதாகவும்” அவர் கூறினார்.

ஊதிய பாதுகாப்பு திட்டத்தின்படி, ஊதியத்தை வங்கிக் கணக்கிற்கோ அல்லது அமீரக மத்திய வங்கியால் சேவை வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கோ முதலாளிகள் அனுப்ப வேண்டும் என்பதையும் MOHRE உறுதிப்படுத்துவதாக ஓபேட் தெிரிவித்துள்ளார். இது சம்பந்தமாக, MOHRE ஆல் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம் ஊதிய மாற்றம் தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்தையும் தங்கள் தொழிலாளர்களுடன் பதிவு செய்து ஆவணப்படுத்துமாறு அவர் முதலாளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Labourers_1_0-2

ஒவ்வொரு முதலாளியும் தங்களது பணியாளர்களுக்கு குறித்த தேதியில் ஊதியத்தினை வழங்க வேண்டும். தனியார் துறைகள் ஊதிய பாதுகாப்பு அமைப்பின்(Wages Protection System) மூலம் தங்களது  பணியாளர்களுக்கு குறித்த தேதியில் ஊதியத்தை வழங்கி தண்டனை மற்றும் அபராதத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

MOHRE தன்னுடன் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு கணக்குச் சேவையின் அறிக்கையை, முதலாளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி, அமைச்சகத்தின் பதிவேடுகளில் அவர்களின் நிலையை முன்கூட்டியே தெரிவிக்கிறது.

முதலாளிகள் தங்கள் நிறுவனங்களின் கோப்புகள் மற்றும் அவர்களின் தொழிலாளர்களின் நிலை தொடர்பான அனைத்து தகவல்களுக்கு வழக்கமான அணுகலை இது உறுதி செய்கிறது.

தனியார் துறைகள் ஊதிய பாதுகாப்பு அமைப்பின் மூலம் முறையான சம்பளத்தை வழங்குவதில் அமீரகம் முன்னோடியாக இருப்பதாக MOHRE தெரிவித்துள்ளது. 2009 இல் செயல்படுத்தப்பட்டதிலிருந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பால் பாராட்டப்பட்டு வருகிறது. பல நாடுகள் தொழிலாளர்களின் ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கவும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap