UAE Tamil Web

அஜ்மானில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது!

அஜ்மானில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணை ஷேக் கலீஃபா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுக்கொண்டிருந்த போது மருத்துவர்களின் உதவியுடன் ஆம்புலன்சுக்குள்ளேயே குழந்தை பிறந்தது.

மார்ச் 11 ஆம் தேதி இரவு, பிரசவ வலியில் இருந்த ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தன, பின்னர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்த போது பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ குழுவினர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

பின்னர் தாய் மற்றும் குழந்தை இருவரும் சரியான மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து மருத்துவர்கள் குழு பெண் குழந்தை ஆரோக்கியமாக் இருப்பதால உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

தேசிய ஆம்புலன்ஸை, அவசர நேரத்தில் தொடர்புக்கொள்ள 998 ஐ அழைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap