UAE Tamil Web

குளியல் தொட்டிக்குள் மூழ்கிய கைக்குழந்தை – நிமிடத்தில் விரைந்துவந்த ஆம்புலன்ஸ்..!

baby feet

ஷார்ஜாவில் தனது கைக்குழந்தையை குளிப்பாட்டுவதற்கு குளியல் அறைக்குள் தூக்கிச் சென்றிருக்கிறார் குழந்தையின் தாய். குளியல் தொட்டிக்குள் அமர வைக்கப்பட்ட பெண் குழந்தை சந்தோஷமாக நீரை அடித்து விளையாடியிருக்கிறது.

அப்போது தாயின் சிறிய கவனக் குறைவின் காரணமாக குழந்தை தொட்டிக்குள் மூழ்கியிருக்கிறது. சில வினாடிகளில் குழந்தையை அதிலிருந்து தாய் தூக்கிவிட்டாலும் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டிருக்கிறது.

உடனடியாக ஆம்புலன்சிற்கு அவர் போன் செய்ய, அடுத்த நிமிடமே விரைந்துவந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.

சரியான நேரத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை குறிப்பாக கைக்குழந்தைகளை கையாளும்போது கூடுதல் கவனத்துடன செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளனர்.

baby feet
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap