இந்த இரண்டு நாடுகளில் இருந்து வரும் முட்டை, கோழிக்குஞ்சுகள், இறைச்சிகளுக்கு அமீரகத்தில் தடை..!

UAE bans eggs, chicks, meats from these countries

ஐக்கிய அரபு அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், “ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிலிருந்து பறவைகள், சில வகையான முட்டை மற்றும் இறைச்சி பொருட்கள் முதலியவற்றை இறக்குமதி செய்ய தடை” விதித்துள்ளதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.

இரு நாடுகளிலும் H5N2, என்ற பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமி அதிக அளவில் பரவுது குறித்து உலக விலங்குகள் சுகாதார அமைப்பின் (OIE) அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டவை:

  • அனைத்து வகையான வீட்டு வளர்ப்பு மற்றும் காடுகளில் இருந்து வரும் பறவைகள்
  • அலங்கார பறவைகள்
  • கோழி குஞ்சுகள்
  • குஞ்சு பொரிக்கும் முட்டை
  • இறைச்சிகள் மற்றும் இறைச்சி சார்ந்த பொருட்கள்
  • வெப்ப சிகிச்சையளிக்கப்படாத கழிவுகள் (non-heat-treated wastes)

மேலும், கோழி முதலிய பறவைகளின் இறைச்சி மற்றும் வெப்ப சிகிச்சையளிக்கப்படாத பொருட்களின் இறக்குமதியையும் இது ஒழுங்குபடுத்தியுள்ளது.

கூடுதலாக ஐக்கிய அரபு அமீரத்தில் சரக்குகளை விடுவிக்க இரு நாடுகளிலிருந்தும் இறைச்சி மற்றும் இறைச்சி சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சுகாதார சான்றிதழ் தேவை என்றும் கூறியுள்ளது.

மேலும், முட்டை இறக்குமதி செய்யவும் சுகாதார சான்றிதழ் தேவை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இருப்பினும், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும், வெப்ப சிகிச்சையளிக்கப்பட்ட கோழி முதலிய பறவைகளின் பொருட்கள் (இறைச்சி மற்றும் முட்டை) இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, விலங்கு மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயல் இயக்குநர் கல்தாம் அலி கயாஃப் கூறுகையில், “இந்த நடவடிக்கைகளின் மூலம், ​​பறவை காய்ச்சல் வைரஸ், நாட்டின் கோழி முதலிய பறவைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் அபாயங்களில் இருந்து அமைச்சகம் பாதுகாக்கின்றது, மேலும் பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வையும் பாதுகாக்கின்றது” என்றார்.

Source : Khaleej times

Loading...