பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக ஸ்வீடனில் இருந்து கோழி உள்ளிட்ட அனைத்து பறவைகள் இறக்குமதியை தடை செய்திருக்கிறது அமீரக அரசு.
இதுகுறித்து பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MoCCAE) வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” அனைத்து வளர்ப்பு மற்றும் காட்டுப் பறவைகள், குஞ்சுகள், குஞ்சு பொரிக்கும் முட்டைகள், பதப்படுத்தப்படாத பொருட்கள் ஆகியவற்றை ஸ்வீடனில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் ஸ்வீடனில் 3,200 வான்கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். குறைந்தது அடுத்த 3 மாதங்களுக்காவது ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே பறவைகளை ஏற்றுமதி செய்யவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
#وزارة_التغير_المناخي_والبيئة #MoCCaE pic.twitter.com/LLk2OranbQ
— MoCCAE (@MoCCaEUAE) November 23, 2020
கடந்த 2 வாரங்களாக பறவைகளை வெட்டுவது பறவைக் காய்ச்சல் பரவ காரணமாக இருப்பதாகவும், காட்டுப் பறவைகள் இதில் பெரும்பங்காற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பண்ணை மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால் காட்டுப் பகுதிகளில் நோய்ப்பரவல் எப்படி இருக்கும் என்பது சரிவரத் தெரியவில்லை. ஆதலால் அடுத்த பண்ணைகளும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது” என ஸ்வீடன் நாட்டின் வேளாண்மைத்துறை தலைவர் காத்தரீனா கிளென், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.