UAE Tamil Web

நாங்க வர்ற வரைக்கும் அதைத் தொடாதிங்க … கடலில் மிதந்த மர்மப்பை – விரைந்துவந்த காவல்துறை..!

drugs in sea

உம் அல் குவைனில் மீனவர் ஒருவர் தனது  படகில் கடலுக்குள் சென்றிருக்கிறார். வலையை வீசி நேரமானதால் அதை இழுக்க, வெள்ளையாக ஏதோ ஒன்று வலைக்குள் சிக்கியிருப்பதை பார்க்கவும் அவருக்கு ஏதோ தவறாக இருப்பது தெரியவந்திருக்கிறது. படகில் இருந்து வலையை முழுமையாக இழுத்து வலையைப் பிரித்துப் பார்த்ததில் அதில் 40 கிலோ எடையில் மாத்திரைகள் பத்திரமான முறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தன.

உடனடியாக அல் மைதான் மீனவர் துறைமுகத்தில் இருந்த காவலர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார் அந்த மீனவர். துரிதமாக வந்த காவல்துறை பையில் இருந்த அனைத்தும் போதை மாத்திரைகள் என்பதைக் கண்டறிந்தனர். அத்தோடு, தகவல் கொடுத்த மீனவருக்கும் பாராட்டினைத் தெரிவித்திருக்கின்றனர்.

அதே நாளில் கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த மற்றொரு நபரும் கடலில் வெள்ளை நிற பிளாஸ்டிக் பை ஒன்று மிதப்பதைப் பார்த்திருக்கிறார். அதற்குள்ளும் போதை மாத்திரைகள் இருந்திருக்கின்றன. உடனடியாக காவல்துறைக்கு விஷயத்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.

பொறுப்புடன் செயல்பட்ட அவருக்கு காவல்துறை பாராட்டு தெரிவித்திருக்கிறது. போதைமருந்துக் கும்பல்களின் வேலையாக இது இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றினை உம் அல் குவைன் காவல்துறை முன்னெடுத்துள்ளது. கடற்பரப்பில் வினோதமான பொருட்கள் மிதந்தால், காவல்துறையிடம் தகவல் கொடுப்பது, அமைவிடத்தினை தெரிவிக்கும் முறை ஆகியவற்றை காவல்துறையினர் இதன்மூலம் விளக்கியுள்ளனர்.

அதேநேரத்தில் பொதுமக்கள் / மீனவர்கள் சந்தேகத்திற்கு இடமான பொருளைக்கண்டால் அதனை காவல்துறை சம்பவ இடத்திற்கு வரும்வரையில் தொடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

drugs in sea
0 Shares
Share via
Copy link