UAE Tamil Web

அமீரகத்தில் பிச்சைக்காரர்கள் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் – ஷார்ஜா காவல்துறை எச்சரிக்கை..!

beggar

அமீரகத்தில் பிச்சைக்காரர்களுடன் நேரடி தொடர்பு கொள்வது கொரோனா தொற்று அபாயத்தை அதிகரிக்கும் என்று ஷார்ஜா காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

- Advertisment -

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிச்சைக்காரர்களை தொடுவதோ அல்லது அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவோ வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனெனில் பிச்சைக்காரர்களை நேரடியாக கையாளுவதன் மூலம் இந்நோய் தொற்று மிக எளிதாக பரவும் அபாயம் உள்ளது.

குடியிருப்பாளர்களிடமிருந்து அனுதாபத்தை தூண்டுவதன் மூலம் பணம் சம்பாதிப்பதே இவர்கள் நோக்கமாக கொண்டுள்ளனர் என்று காவல்துறை கூறியுள்ளது.

பெரும்பாலும் பிச்சைக்காரர்கள் குடியிருப்பாளர்களை நிறுத்தி பணம் கேட்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதே நேரத்தில் இவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் அணிவது, கையுறைகள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.

விரைவான நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் இடங்களான சூப்பர் மார்க்கெட், மசூதிகள், பஸ் ஸ்டாண்ட்கள் போன்ற இடங்களின் முன்பகுதியில் இவர்கள் சுற்றித் திரிகிறார்கள். இதையடுத்து பிச்சைக்காரர்களை தங்கள் சுற்றுப்புறத்திலோ, கடைகளிலோ, மசூதிகளிலோ அல்லது பிற இடங்களுக்கும் முன்னால் இருப்பதை கண்டால் உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 901 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது 80040 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.