UAE Tamil Web

வேலைக்கான அனுமதியை (Work Permit) வழங்க ஆரம்பித்த அமீரகம் – ஆனால் இப்போதைக்கு இவர்களுக்கு மட்டும்தான்..!

Visa--GDRFA_work-permit

அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation) கோல்டன் விசா வைத்திருப்போருக்கான வேலைக்கான அனுமதியை (work permit) வழங்கத் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பின்வரும் 3 வகையான கோல்டன் விசா நபர்களுக்கு வேலைக்கான அனுமதியானது வழங்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவையாவன,

  • கோல்டன் விசாவைப் பெற்றபோது வேலையில்லாமல் இருந்தவர்கள், இப்போது ஒரு குறிப்பிட்ட முதலாளிக்கு வேலை செய்ய விரும்புகிறவர்கள்.
  • ஏற்கனவே பணியில் இருந்துகொண்டு புதிய முதலாளிக்கு வேலை செய்யத் திட்டமிடுபவர்கள்.
  • கோல்டன் விசா வைத்திருப்பவரின் வேலைக்கான அனுமதி மற்றும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பும் முதலாளிகள்.

பெற்றோரின் ரெசிடென்சி விசா மூலமாக வேலைக்கான அனுமதிகோரி விண்ணப்பிக்கும் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோல்டன் விசா பெறும் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான வேலைக்கான அனுமதி மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும். மேலும் அவை அமீரக சட்டங்களுக்கு உட்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைகளுக்கு வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Visa--GDRFA_work-permit
0 Shares
Share via
Copy link