UAE Tamil Web

துபாய் ஆட்சியாளரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகள்..!

sheikh Mohammed

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று தன்னுடைய 72 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து சுவாரஸ்யம் மிகுந்த அவருடைய வாழ்க்கை வரலாற்றை நேற்று நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு அதிகாரிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் துபாய் ஆட்சியாளருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

நம்முடைய பேஸ்புக் பக்கத்திலும் ஆயிரக்கணக்கான நமது வாசகர்கள் துபாய் ஆட்சியாளருக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

sheikh Mohammed
0 Shares
Share via
Copy link