UAE Tamil Web

ஆப்கானிஸ்தானை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – அமீரக வெளியுறவுத்துறை!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் ஆப்கன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமீரக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க இருப்பவர்கள் அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அமீரக வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆப்கனில் உள்ள கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் துணை நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவையை முற்றிலும் அமீரகம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link