அமீரகத்தில் உள்ள மத்திய வங்கி (CBUAE) இன்று வியாழன் அன்று தனது ஒழுங்குமுறைக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு “நிர்வாக அனுமதியை” (Administrative Sanction) விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த மே 18, 2022 முதல், ஒரு வருடத்திற்கு புதிய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்குவதில் இருந்து அந்த நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் மட்டும் உள்ளூர் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட இரண்டாவது நிறுவனம் இதுவாகும்.
கடந்த செவ்வாயன்று, அமீரகத்தில் இயங்கும் ஒரு நிதி நிறுவனம், கட்டுப்பாட்டாளரின் விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்காததற்காக அந்த நிறுவனத்தின் மீது நிர்வாக மற்றும் நிதித் தடைகளை விதிப்பதாக மத்திய வங்கி அறிவித்தது.
அமீரகத்தில் செயல்படும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீட்டு வணிகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், அமீரகத்தின் காப்பீட்டு அமைப்பின் செயல்திறனை மேம்படுத்தவும், UAEயின் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் தரங்களுக்குக் கீழ்ப்படிவதை உறுதிசெய்ய வேண்டும்.
எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய காப்புறுதி நிறுவனத்தின் பெயரை மத்திய வங்கி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.